
ஈழத்து நாடக உலகில் தனி நடிப்புத் துறையில் தனக்கென ஒரு முத்திரை பதித்த கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களைப் பற்றி ஏற்கனவே இரண்டு இடுகைகளைத் தந்திருந்தேன்.
கடந்த 2006 ஆம் ஆண்டோடு இவர் கலைத்துறைக்கு வந்து நாற்பது ஆண்டுகள் கடந்த நிலையில், கனேடிய தமிழ் கலைஞர்கள் கழகம்
பாரதி புறொடக்சன்ஸ் வழங்கும் கே. எஸ். பாலச்சந்திரனின் “அண்ணை றைற்”
முதலான தனிநடிப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு இறுவட்டு (CD) வெளியீட்டு விழா வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை)
மாலை 5.30க்கு, Scarborough Civic Centre மண்டபத்தில் (150 Borough Drive
(North-west corner of McCowan Road and Ellesmere Road))இடம்பெறவிருக்கின்றது.
தொடர்புகளுக்கு: (416)529-2821
அதனையொட்டிய சிறப்புப் படையலாக, கே.எஸ்.பாலசந்திரன் அவர்கள் தயாரித்து வழங்கிய வாத்தியார் வீட்டில் வானொலி நாடகத்தின் ஒரு பகுதியையும், 2005 ஆம் ஆண்டில் அவருடன் நான் கண்ட ஒலிப்பேட்டியையும் தருகின்றேன்.
வாத்தியார் வீட்டில்

வேலாயுதச் சட்டம்பியார், தனது மனைவி செல்லம்மா, மகன் வசீ, மகள் உமாவுடன் உங்களைச் சந்திக்க வருகின்றார்.
பங்கு கொள்ளும் கலைஞர்கள்
கே.எஸ்.பாலச்சந்திரன்.ஏ.எம்.சி.ஜெயஜோதி, கலிஸ்டா திருச்செல்வம், ஆர் யோகராஜா.
17 comments:
வணக்கம் பிரபா பதிவுக்கும் ஒலி வடிவில் தந்தமைக்கும் நன்றிகள்
வணக்கம்!
வரணியூரான், ராமதாஸ், அப்புக்குட்டி இராஜகோபால், முகத்தார் ஜேசுரட்ணம், பாலச்சந்திரன் போன்றவர்கள் வானொலி நாடகத்தைப் பொறுத்தளவில் புதிய பரிமாணத்துக்கு இட்டுச் சென்றவர்கள் என்றால் மிகையாகாது.
பாலச்சந்திரன் அவர்களது பதிவைப் போல, இயன்றளவு ஏனைய கலைஞர்களது பதிவுகளையும் இட வாழ்த்துக்கள்!!
'சோழியான்'
மிக்க நன்றி அண்ணா . . .
//வரணியூரான், ராமதாஸ், அப்புக்குட்டி இராஜகோபால், முகத்தார் ஜேசுரட்ணம், பாலச்சந்திரன் போன்றவர்கள் வானொலி நாடகத்தைப் பொறுத்தளவில் புதிய பரிமாணத்துக்கு இட்டுச் சென்றவர்கள்//
நிச்சயமாக . . .
ராமதாஸ் இப்பொழுதும் வானொலிகளுக்கு நாடகங்கள் எழுதுகிறார்
// சின்னக்குட்டி said...
வணக்கம் பிரபா பதிவுக்கும் ஒலி வடிவில் தந்தமைக்கும் நன்றிகள் //
சின்னக்குட்டியர்
உங்களைப் போல ரசிகர்களுக்கு விருந்தாக இந்தத் தனி நடிப்புக்கள் சீடியில் வருகின்றன. நாம் கேட்டு ரசித்து, தற்போதைய கவலை சூழ் ,மன இறுக்கத்திலிருந்து விடுபட ஒரு சிரிப்பு மருந்தாகஒ பாவிக்கலாம்.
வாத்தியார் வீட்டில் நாடகத்தை இணைத்திருக்கின்றேன். நம்மூர்ப் பேச்சுவழக்கில் அமைந்த ஒரு சிறந்த படைப்பு
வணக்கம் சோழியான்
நீங்கள் குறிப்பிடும் கலைஞர்கள் குறித்த முழு விபரங்களோடு அவர்களின் படைப்பின் பாகமும் எதிர்வரும் காலத்தில் வெளியிடவுள்ளேன். அந்த வகையில் அடுத்து ஒலிபரப்பாளர், மெல்லிசைப் பாடகர் எஸ்.கே.பரராஜசிங்கத்தின் ஆளுமை குறித்த பதிவு வர இருக்கின்றது.
தங்கள் கருத்துக்கு நன்றிகள்.
//மாயா said...
நிச்சயமாக . . .
ராமதாஸ் இப்பொழுதும் வானொலிகளுக்கு நாடகங்கள் எழுதுகிறார்//
வணக்கம் மாயா
தாயகத்தில் இருந்து எழுதும் அருமையானதொரு வாய்ப்பைப் பெற்றிருக்கின்றீர்கள். எம் தாயகக் கலைஞர்கள் தொடர்பான விபரங்களைத் தேடிப்பிடித்து உங்கள் வலைப்பதிவிலும் எழுதுங்கள்.
இது கட்டளை இல்லை வேண்டுகோள் ;-)
பகிர்ந்தமைக்கு நன்றி.
தொடரட்டும் உங்கள் பணி.
//நாம் கேட்டு ரசித்து, தற்போதைய கவலை சூழ் ,மன இறுக்கத்திலிருந்து விடுபட ஒரு சிரிப்பு மருந்தாகஒ பாவிக்கலாம்.//
அதுசரி, சின்னக்குட்டி, உங்களுக்கெல்லாம் அப்பிடியென்ன 'கவலை சூழ் மன இறுக்கம்'?
//அதுசரி, சின்னக்குட்டி, உங்களுக்கெல்லாம் அப்பிடியென்ன 'கவலை சூழ் மன இறுக்கம்'? //
அண்ணை !
அனுபவிக்கணும், ஆராயக்கூடாது ;-)
பேட்டியில் அவர் குறிப்பிட்டது போல் நாட்டு நிலமைகளால் கவலை நம் எல்லோருக்கும் உண்டு, அதைத் தற்காலிகமாகத் தள்ளி வைக்கும் மருந்து இந்தச் சிரிப்பு
நிச்சயமாக அண்ணா . . .
முதற்கட்டமாக இலங்கையிலிருந்து வெளிவந்த திரைப்படங்களின் பட்டியலை எனது பலிபீடம் ! Blog
இல் பதிவு செய்துள்ளேன் {http://palipedam.blogspot.com/}பர்த்திருப்பீர்களென நினைக்கிறேன்
அதேபோல் எம் தாயகக் கலைஞர்கள் தொடர்பான விபரங்களைத் பற்றியும் பதிவு செய்ய எண்ணி உள்ளேன்
நன்றி
பிரபா,
பாலச் சந்திரனைப் பற்றி இந்த பதிவு மூலமா நெறயத் தெரிஞ்சுக்கிட்டேன்.
தகவல்கள் தந்ததுக்கு நன்றி
அண்ணையை மீண்டும் ரசித்துச் சிரித்தேன்!
பேட்டியின் மனதைத் தொட்ட வரிகள்!
//நகைச்சுவை என்பது மக்களைச் சென்றடைவது சாத்தியம் அதிகம். மக்களைக் கவர்வது என்பதில் நகைச்சுவை முக்கியமான ஒரு இடத்தைப் பெறுகின்றது. அதேவேளையில் மக்களைச் சிரிக்கவைப்பது என்பது சந்தோஷமான விடயம் தானே? ஏனென்றால் சோகங்களைச் சொந்தங்களைச் சுமந்து கொண்டிருக்கும் எங்கள் மக்கள் கொஞ்ச நேரமாவது சிரிக்க வைக்க முயற்சிப்பது என்பது சந்தோஷமான ஒரு அனுபவம்.//
அனுபவித்து ,உணர்ந்து சொன்ன வார்த்தைகள்.
யாவுக்கும் நன்றி!
அருமையான பதிவும் , ஒலிப்பதிவும் பிரபா, பழைய ஞாபகங்களை ஊட்டிவிட்டீர்கள். விரைவில் நானும் எனது நினைவுக்குறிப்புக்களையும், எனது நாடக ஒலிப்பதிவுகளை வலையில் இடலாம் என நினைக்கிறேன்.
//நெல்லைக் கிறுக்கன் said...
பிரபா,
பாலச் சந்திரனைப் பற்றி இந்த பதிவு மூலமா நெறயத் தெரிஞ்சுக்கிட்டேன்.
தகவல்கள் தந்ததுக்கு நன்றி//
வணக்கம் நெல்லைக்கிறுக்கரே
உங்களைப் போன்ற தமிழகச் சகோதரர்களிடம் நம்மூர்க் கலைஞர் குறித்த விபரங்கள் போய்ச் சேருவது குறித்து நானும் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
அண்ணையை மீண்டும் ரசித்துச் சிரித்தேன்!//
யோகன் அண்ணா
பாலச்சந்திரன் அண்ணை கூறிய வார்த்தைகளை மெய்ப்பிக்கின்றது அவரது படைப்புக்கள். மிக்க நன்றி தங்கள் கருத்துக்கு
//உடுவை said...
விரைவில் நானும் எனது நினைவுக்குறிப்புக்களையும், எனது நாடக ஒலிப்பதிவுகளை வலையில் இடலாம் என நினைக்கிறேன். //
வணக்கம் ஐயா
அதுகுறித்து மட்டற்ற மகிழ்ச்சியடைவதில் நானும் ஒருவனாக இருப்பேன். இன்றும் மல்லிகை அட்டைப்படக்கட்டுரைகளை வாசித்துக் கொண்டிருந்த பொழுது உங்களைக் குறித்த கட்டுரையை மீளவும் வாசித்தேன். தங்கள் எழுத்தாற்றலை மட்டுமே நுகர்ந்த எனக்கு உங்களின் வானொலிப்படைப்புக்களைக் கேட்கும் நல்வாய்ப்புக்காகக் காத்திருக்கின்றேன்.
ஒலிப்பதிவு ஏற்றல் தொடர்பில் ஏதாவது சிக்கல் இருந்தால் எனது தனி மடலான kanapraba@gmail.com இற்குத் தொடர்பு கொள்ளுங்கள்.
நானும் பல தடவை K.S பாலச்சந்திரனின் அண்ணை றைட் பார்த்திருக்கின்றேன். வரணியூரானின் நாடகங்கள் பல பார்க்கின்ற வாய்ப்புகள் சிறிய வயதில் கிடைத்தது. ஈழத்து கலைஞர்கள் எங்கு வாழ்ந்தாலும் தேடிப்பிடித்து தகவல்களை கோர்த்து கொடுப்பதையிட்டு மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள்.
வணக்கம் காரூரான்
வாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றிகள்.
Post a Comment